முன்னுரை

இந்த பாடத்தில் நாம் Golang நிரலாக்க மொழி பற்றியும் அதை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்து எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

Golang அறிமுகம்

நிரலாக்க மொழிகளின் வகைகள்

இந்த பாடத்தில் நாம் Golang நிரலாக்க மொழி பற்றியும் அதை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்து எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

நாம் சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டும் என்றால் பேருந்து,விமானம்,ரயில்,மகிழ்வுந்து,மிதிவண்டி மற்றும் பலவிதமான போக்குவார்த்துகளை பயன்படுத்தலாம். இவைகளை ஆகாயம், ரயில் மற்றும் நில போக்குவரத்து என்று மூன்று வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். இந்த மூன்று போக்குவரத்து இடையில் உள்ள சில வேறுபாடுகளை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

அம்சங்கள் நில போக்குவரத்து ரயில் போக்குவரத்து ஆகாய போக்குவரத்து
விலை
நேரம்
வசதி

இதைப்போல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மென்பொருள் பல விதமான நிரலாக்க மொழிகள் பயன்படுத்தி உருவாக்க படுகின்றன. உதாரணத்திற்கு நாம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட்(android) செயலி(mobile app) பெரும்பாலும் Java உபயோகபடுத்தி உருவாக்க படுகிறது. ஆனால் இவ்வகை செயலிகள் dart, kotlin,c++,C#,web technologies(html,css,javascript) மற்றும் பலவிதமான மொழிகள் கொண்டு உருவாக்க முடியும். இந்த நிரலாக்க மொழிகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு அதன் கட்டமைப்பு1. java,C#,dart போன்றவை ஆப்ஜெக்ட் ஓரியன்டட்(Object oriented)2 என்றும் C++,Kotlin மொழில்கள் ஜெனரல் பர்ப்பஸ்(General Purpose), web technologies டொமைன் ஸ்பெசிபிக்(domain specific) நிரலாக்க மொழிகள் என்று மூன்று வகைகளாக பிரிக்கப் படுகின்றன.

Golang ஒரு ஜெனரல் பர்ப்பஸ் நிரலாக்க மொழி

Golang அல்லது சுருக்கமாக Go நிரல் மொழி 2007 ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட மொழி. ராபட் கிறீசேமிர்(Robert Griesemer),ராப் பைக்(Rob Pike)மற்றும் கென் தாம்சன்(Ken Thompson) இணைந்து Golang யை வடிவமைத்தார். கூகுள் நிறுவனம் 2009 ஆண்டு திறந்த மூல நிரலாக்க மொழி (Open source programming language) என்று அறிவித்து 2012 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. Golang ஒரு ஜெனரல் பர்ப்பஸ் நிரலாக்க மொழி. இவ்வகை மொழிகள் வைத்து எந்த ஒரு தளத்திற்கும்(domain)மென்பொருள் உருவாக்க முடியும். Golang மொழி வைத்து இணைய மென்பொருள், டெஸ்க்டாப் மென்பொருள்(Desktop apps), செயலி(Mobile app) உருவாக்க முடியும்.

Golang ஒரு வடிவமைக்கப்பட்ட(Engineered) மொழி

தமிழ் மொழி இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மொழி என்று கூறப்படுகிறது. நாம் இன்று வழக்கில் பயன்படுத்தும் தமிழுக்கும் ஆதித்தமிழன் பயன்படுத்திய தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடு இலக்கணம்,எழுத்து வடிவம் என்று பல்வேறு கோணங்களில் மாறுபட்டு இருப்பது இயற்கை.இதற்கு முக்கிய காரணம் பரிணாமம் என்று வைத்துக் கொள்ளலாம்.

இது ஒருபுறம் இருக்க தெலுகு,காண்டம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழில் இருந்து திரிந்து வேறு ஒரு உருவம்,இலக்கணம் கொண்டு இயங்குகிறது.மொழி வல்லுநர்கள் ஒன்றுகூடி ஒரு மொழியை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்து உலகில் உள்ள எல்லா மொழிகளின் சிறந்த பண்புகளை எடுத்து ஒரு மொழி உருவாக்கினால் அது வடிவமைக்கப்பட்ட மொழி என்று கருதப்படும் 4. நிரலாக்க மொழிகள் வேறு ஒரு நிரலாக்க மொழியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு, பின்பு திரிந்து தனி ஒரு மொழியாக பரிணாமம் அடையும். உதாரணமாக C++ மொழியின் அடிப்படை நிரலாக்க மொழி C. C++ உருவாக்கிய காலத்தில் அதன் தொடரியல் நிரல்கள் C மொழியை அடிப்படையாக கொண்டு இயங்கியது ஆனால் காலப்போக்கில் அதன் இடையில் பல வேறுபாடுகள் வர ஆரம்பித்தது.தமிழ் மொழி பரிணாமம் அடைய காரணம் எதனும் ஒரு சமுகதையோ அல்லது ஒரு கட்டமைப்பை குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஆனால் நிரலாக்க மொழிகளின் பரிமாண வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அதன் டெவலப்பர் சமூகத்தையோ(developer community) அல்லது மொழிய உருவாக்கியவர்கள் பொறுப்பாக இருப்பார்கள். தற்போது C++ மொழியின் தரநிலைகள்(syntax) ISO நிறுவந்தினால் உள்ள C++ குழுவினரால் நிர்ணைக்கபடுகிறது. Golang தொடரியலுக்கம்(Syntax) C தொடரியலுக்கம் ஒற்றுமை இருந்த போதிலும் வேறு சில நிரல்களின் அம்சங்கள் தேர்வு செய்து உருவாக்கப்பட்டது. உதாரணமாக டோனி ஒரே(Tony Hoare) 1985யில் எழுதிய கமுனிகேட்டின்க் சீகுவென்ஷியல் பிரசேசேஸ்(communicating sequential Processes) புத்தகத்தின்3 அடிப்படையில் ஒத்திசைவு(concurrency) அம்சத்தை Golang மொழியில் சேர்த்துள்ளனர்

Ubuntu லினக்ஸ் இயங்கு தளத்தில்(operating system) Golang நிரலாக்கம்

உங்கள் terminal​ ​யை திறந்து பின் வரும் அடிகளை மேற்கொள்ளவும்.

  1. முதலில் நாம் curl பயன்படுத்தி golang பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
curl -O https://storage.googleapis.com/golang/go1.17.8.linux-amd64.tar.gz
  1. gzip யில் அடங்கியுள்ள கொப்புககள்ளை வெளியில் எடுப்போம்.
tar -xvf go1.17.8.linux-amd64.tar.gz
  1. go என்ற ஃபோல்டரை உள்ளது என்று உறுதி செய்து விட்டு, பின் go ஃபோல்டரை /usr/local என்ற போல்டருக்கு நகர்த்தவும்.
sudo mv go \usr\local
  1. go தொகுப்பிக்கு நாம் எழுதும் நிரல்கள் எங்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்ட GOPATH வேரியபிள் குறிப்பிடுவோம்.நகர்த்தவும்.
export GOPATH=$HOME/go-workspace
export PATH=$PATH:/usr/local/go/bin:$GOPATH/bin
  1. எல்லாம் சரியாக செய்து இருக்கிறோமா என்று உறுதி செய்வோம்.
go version
  

go1.17.8 நம் கண்ணியில் வெற்றிகரமாக நிறுவு(install) செய்துவிதட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்!!

1இங்கு கட்டமைப்பு என்ற சொல்லுக்கு நாம் ஒரு மென்பொருள் உருவாக்க நாம் பயன்படுத்தும் வழிமுறைகள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்

2 மேலும் தெரிந்து கொள்ள

3 http://www.usingcsp.com/cspbook.pdf

4 ஒரு மொழி வடிவமைப்பு மிக கடினம். இதுவரையில் எழுத்து இல்ல ஒரு மொழிக்கு வடிவம் மட்டும் கொடுக்கபட்டுள்ளது. உதாரணமாக மலாய் மொழி இலத்தீன் எழுக்களை அடிபடையாக கொண்டுள்ளன