இயக்குனர்கள் பாரதிராஜாவும் , பாலாவும் குற்றப் பரம்பரை என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க சில வருடங்கள் முன்பு மோதி கொண்டார்கள். அன்றில் இருந்து இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வம். இப்பொழுதுதான் படிக்க முடிந்தது இந்த நாவலை இரண்டு கோணங்களில் பார்க்கலாம், ஒன்று நான் இப்படித்தான் இருப்பேன், யாரு சொல்லுக்கும் மதிப்பில்லை என்று ஒரு கூட்டம்(கொம்பூதி), எப்படியாவது உயிர் வாழனும் ஒரு கூட்டம்(பெரும்பச்சேரி), நான் சொல்லுறத கேட்டு தான் அனைவரும் வாழனும் ஒரு கூட்டம்(பெருநாழி). இவர்கள் இடையில் உள்ள பிரிவை பயன்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு கூட்டம்(ஆங்கிலேயர்கள்). இந்த கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் குற்றப்பரம்பரை.

இரண்டாவது, வைரம் தேடி அலையும் நாகமுனி யின் கதை எதற்காக இந்த நாவலில் முக்கிய கதையுடன் இணைக்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். இதுதான் என்னுடைய விளக்கம், இந்த சிறுகதை முக்கிய கதையின், கருப்பொருள் ளை உவமை படுத்தி எழுதப்பட்டது. ஒரு பேராசை பிடித்தவன்(நாகமுணி,பச்சமுத்து). ஒரு வெள்ளந்தி(வஜிராணி,வேயன்னா), இந்த வெள்ளந்தி க்கு வேறு ஒரு மனிதனிடம் (சேது,வில்லயுதம்) அளவுகடந்த பாசம். பேராசை பிடித்தவன் வெள்ளந்தி யை அழிகிறான். இந்த வெள்ளந்தி யை வளர்த்த (ஹசார் தினார், வையமுத்து) மனிதன் கையால் பேராசை பிடித்தவன் (நாகமுணி,பச்சமுத்து) அழிக்கிறான். இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவரும் குற்றப்பரம்பரை செர்ந்தவர்கள்

இந்த கதை திரைப்படம் பாணியில் எழுதப்பட்ட நாவல். காதபாத்திரங்கள் அறிமுகம் ஆகும் வரை படிக்க சற்று சிரமமாக இருந்தது.

Good Reads

View all my reviews on Good Reads